மாணவி வித்தியா கொலை: மாவை எம்.பி யிடம் விசாரணை!

வித்தியா படுகொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மாவிட்டபுரத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடமும் வாக்குமூலமும் பெறப்படவுள்ளது. அதற்கு அவரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண செய்தியாளரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. அவரால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தொடர்பாகவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
Related posts:
சீரடைந்தது எரிபொருள் விநியோகம் - பிரதமர்
மக்களின் விருப்பத்திற்கமையவே நாட்டை நிர்வகிப்பேன் – மஹந்த ராஜபக்ச!
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்!
|
|