மாணவி வித்தியா கொலையுடன் மேலும் ஒருவர் தொடர்பு- குற்றப் புலனாய்வு பிரிவு

பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது, வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அத்துடன் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்படாமல் உள்ளதாகவும், அவரை கைது செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு நீதிவான் வை.எம்.எம்.றியால் ஒத்திவைத்துள்ளார்.
அத்துடன் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிலுள்ள வேறு நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்யக் கூடாது எனவும் அவ்வாறான விடயங்கள் காணப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும் எனவும் நீதவான் சந்தேக நபர்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|