மாணவி வித்தியா கூட்டுப் பலாத்காரம் – படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை கைதி கண்டி தேசிய வைத்தியசாலையில் மரணம்!

Monday, April 1st, 2024

புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவைக் கூட்டுப் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது

புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் தவகுமார் செந்தில் (37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சில உடல் நிலை காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்ததையடுத்து, அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

000

Related posts: