மாணவி மீது தனியார் கல்வி நிலைய நிர்வாகி தாக்குதல் – கிளிநொச்சியில் சம்பவம்!

Friday, January 13th, 2017

தனியார் கல்வி நிலையத்தில் கற்கும் மாணவியை கல்வி நிலைய நிர்வாகி கடுமையாகத் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவி கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் கிளிநொச்சி கோரக்கன்னட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது தனியார் கல்வி நிலையத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது முறைப்பாட்டையடுத்து கிளிநொச்சிப் பொலிஸார் நிர்வாகியை கைது செய்துள்ளதுடன்  இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஒருவர் ஊடககங்களுக்கு தெரிவித்துள்ளார்.

arrest_1_0_mini-720x480

Related posts: