மாணவி கொலை வழக்கு நாளை மேல் நீதிமன்றத்தில்!

Tuesday, August 9th, 2016

வித்தியாவின் கொலை வழக்கு நாளை புதன்கிழமை (10) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் காலநீடிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

புங்குடுதீவு மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒரு வருடமாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று, கடந்த மே மாதம் 11ஆம் திகதி காலநீடிப்புக்காக மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 3 மாதங்களுக்கு காலநீடிப்புச் செய்து மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார். அந்த காலநீடிப்பு நாளையுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் தொடர்ந்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்காக மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

Related posts: