மாணவிகள் துஷ்பிரயோகம் – பாடசாலை அதிபர் கைது!

கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் சாந்தனி மீகொட முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சந்தேகநபர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 7 மாணவிகளும் சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜப்பான் தொழில் வாய்ப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைசாத்து!
டிப்ளோமா பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி- 08 ஆம் திகதி நியமனம்!
தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசாங்கத்தி...
|
|