மாணவர் சீருடை பெறுவதற்கான வவுச்சர் நவம்பரில் விநியோகம்!
Monday, September 19th, 2016அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்குமான இலவச சீருடை பெறுவதற்கான கூப்பன்கள் நவம்பர் மாதம் முதலாம் வாரத்திலிருந்து விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வருடத்தைப் போன்று இம்முறை சீருடை கூப்பன்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர்கள் வருகை தரத் தேவையில்லையெனவும், வகுப்பாசிரியர் குறித்த மாணவரின் கையொப்பத்துடன் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்டுள்ள கூப்பன்களில் மாகாணம், கல்விக் காரியாலயம் மற்றும் குறித்த பாட சாலை என்பனவற்றைக் கண்டறியும் வகையில் இரகசிய இலக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தெரிவித்துள்ளார்.
Related posts:
யுத்த களமாக காட்சியளிக்கும் கொஸ்கம : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு பணிப்பு! (படங்கள் இணை...
தொடர் மழை: வைரஸ் காய்ச்சலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்?
ரயில் நிலையங்களை பசுமை மயமாக அமைக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் சி.பி.ரட்நாயக்க!
|
|
அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானம் - நிதி அமைச்சின் செயலாளர் எஸ்...
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் - இந்திய ...
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!