மாணவர் கடன் திட்டத்திற்கான கால அவகாசம் நீடிப்பு!

Friday, March 16th, 2018

மாணவர் கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசமானது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற போதும், பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்களுக்கு எட்டு லட்சம் ரூபா வரையிலான கடன் வசதிகளை வழங்குவதெனஉயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடர்வதை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் இந்த கடன் வசதியை வழங்குகின்றது.  இதுபற்றிய மேலதிக விபரங்களை உயர்கல்வி அமைச்சின்  www.mohe.gov.lk  என்ற  இணையத்தளத்தின் மூலம் அறிய முடியும்.

Related posts: