மாணவர்கள் விரும்பிய கடைகளில் சீருடைக் கொள்வனவு செய்யலாம்!

பாடசாலை மாணவர்களுக்குரிய 2017ஆம் ஆண்டுக்கான இலவச சீருடைக்கு வவுச்சர்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக ஒசுற்றுநிருபம் வெளியாகியுள்ளது. இச் சுற்றுநிருபத்தில் 2016ஆம் ஆண்டு போலன்றி 2017ஆம் ஆண்டுக்குரிய இலவச சீருடையை மாணவர்கள் தாம் விரும்புகின்ற கடைகளில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் வவுச்சர்கள் மூலம் மாணவர்கள் சீருடைத் துணியை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அனுமதியளிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே இச் சீருடைத் துணிகளை கொள்வனவு செய்யக்கூடியதாக நிபந்தனை இடப்பட்டது. எனினும் இந்த நடைமுறையில் தரமற்ற சீருடைகள் வழங்கப்பட்டதான முறையீடுகளை அடுத்து 2017ஆம் ஆண்டுக்குரிய சீருடையை மாணவர்கள் தாம் விரும்பும் கடைகளில் கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நெற்செய்கை அழிவுறும் அபாயம் - பல்லவராயன்கட்டு பகுதி விவசாயிகள் கவலை!
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்!
இலங்கைக்கான தற்காலிக தடையை மேலும் நீடித்த இத்தாலி !
|
|