மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் – அதிபர் பணி இடைநீக்கம் – மேல் மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு!
Wednesday, November 9th, 2022ஆசிரியையின் பணப்பையை திருடியதாக கூறி மாணவர்கள் பலர் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மில்லனியா குங்கமுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் திணைக்கள ரீதியில் விசாரணை நடத்தப்படும் என மேல் மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த அதிபர் மற்றும் மில்லனிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா நேற்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு!
மும்மொழியிலும் அவசியம்: வர்த்தமானி வெளியானது!
“வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை COP28 மாநாட்டில் முன்வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்...
|
|