மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது!

Tuesday, June 27th, 2017

போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு வலியுறுத்தி அண்மையில் மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலால் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Related posts: