மாணவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சிசு செரிய பேருகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மாணவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சிசு செரிய பேருகளின் எண்ணிக்கையை இன்றுமுதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் தாவன பண்டுக சுவர்ணஹங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஏதேனும் பேருந்து தேவைப்பாடுகள் ஏற்படுமிடத்து அது தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து அதிபர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல்மாகாணத்தில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
அதற்கமைய மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றவா என்பது தொடர்பில் அவதானிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண பாடசாலை மாணவர்கள் பயணிக்கின்ற பேருந்து மற்றும் வான் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை எழுமாற்றான ரபிட் ஆண்டின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
000
Related posts:
|
|