மாணவர்கள் இணைப்பில் மோசடி: பாடசாலைகளுக்கு எதிராக விசாரணை – கல்வி அமைச்சர்!

Friday, January 13th, 2017

தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களை முறையற்ற விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் கிடைபெற்ற பாடசாலைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பழைய மாணவர் சங்கத்தினாலேயே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரோயல் கல்லூரியில் மாணவர்கள் இணைப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. எனினும் முறையான விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் திங்கட்கிழமை முதல் ரோயல் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

akila-viraj-minister

Related posts:


கிராம அலுவலர் பிரிவு ரீதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேலணைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வீட்ட...
உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்நாடுகள் ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்ட...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு தொற்றுப் பரவல் தொடந்தும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!