மாணவர்களை காப்பாற்றிய இலங்கை விமானிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் பாடசாலைகள்!

Tuesday, February 4th, 2020

சீனாவின் வுஹான் பிராந்தியத்தில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானிகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனால் குறித்த விமானிகள் சிலரின் பிள்ளைகள் பாடசாலை வருவதனை தவிர்க்குமாறு பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் அவ்வாறு விமான ஊழியர்களுக்கு இந்த நோய் தொற்றுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

இவ்வாறான சிந்தனைகள் காரணமாக நாட்டினுள் தேவையற்ற அச்சங்களே ஏற்படுவதாக தேசிய தொற்று நோய் பிரிவு வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

நோய் தொற்று தொடர்பில் அவசியமற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள கூடாதென அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

வுஹான் பிராந்தியத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை 360 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பகுதியில் சிக்கியிருந்த 33 மாணவர்களை இலங்கை குழுவினர் மீட்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: