மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு சரியான பொறிமுறையை தேவை!

புதிய பாடசாலை தவணை ஆரம்பாமாகவுள்ள நிலையில், மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு சரியான பொறிமுறையை தேவை என்று அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கம் கோரியுள்ளது.
புதிய பாடசாலை தவணை ஜூலை 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும் எரிபொருள் கொள்வனவு செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்தார்.
கியூஆர் முறையை அறிமுகப்படுத்தி எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான கட்டுப்பாடுகளை எரிசக்தி அமைச்சு விதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதிய தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு முறைமை இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார்.
அதற்கமைய வாகனத்தின் இலக்கத்தகட்டின் அடிப்படையில் மட்டுமே உரிமையாளர்கள் எரிபொருளைப் பெற முடியும் என்றும் இந்த முறைமையின் அடிப்படையில் அனைத்து பாடசாலை வாகன உரிமையாளர்களும இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை கறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|