மாணவர்களை ஏற்றிச் செல்லாத இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மீது நடவடிக்கை!

Wednesday, March 23rd, 2016

வீதியில் காத்து நிற்கும் பாடசாலை மாணவர்களை சகல பேருந்துகளும் கட்டாயம் ஏற்றிச் செல்ல வேண்டும். அவ்வாறு ஏற்றிச் செல்லாத இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதுடன் சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என யாழ். சாலையின் முகாமையாளர் செ. குலபாலசெல்வம் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் காலையில் பாடசாலை செல்வதற்காகக் காத்திருக்கும் போது அவர்களைப் பேருந்துகளில் ஏற்றிச் செல்லாமல் விடுவது அந்த மாணவர்களின் கல்விக்கு ஒத்தாசை வழங்காமல் விடுவதற்குச் சமன். இதனால் அந்த மாணவர்களின் கல்வி பாதிப்படைவதுடன் அவர்களது பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, யாழ். சாலை பேருந்துச் சாரதிகளும், நடத்துனர்களும் பாடசாலை சீருடையுடன் வீதியில் நின்று பேருந்துகளை மறிக்கும் மாணவர்களைக் கட்டாயம் ஏற்றிச் செல்ல வேண்டும். இந்த அறிவுறுத்தலைக் கடைப்பிடிக்காத சாரதிகள், நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: