மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவது அவசியம் – வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!
Monday, December 13th, 2021மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதன் தேவையை வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
தேசிய வானொலியின் றுகுணு சேவையில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமைச்சர் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஊடக கழங்களை உருவாக்குவதற்கு இதன் மூலம் வசதி கிடைக்கின்றது என்றும் தெரிவித்தார்.
மேலும் அனைத்துப் பாடசாலைகளிலும் ஊடக கழகங்கள அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் இதில் பொறுப்புக்கள் உண்டு. ஊடக கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த வேலைத்திட்டம் மிகவும் முக்கியமானதாகும்.
அரச ஊடகங்கள் – வரி செலுத்தும் மக்களுக்கு சுமையாக அமையக்கூடாது. அரசாங்கத்தின் புகழை மாத்திரம் முன்னெடுப்பது மட்டும் பொறுப்பல்ல. அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்களில் குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றை நிவர்த்தி செய்து முன்னோக்கிச் செல்ல உரிய பின்புலத்தை வகுப்பது ஊடகங்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்..
இதேநேரம் சமூக வானொலி சேவைகளின் மூலம் வழங்கப்படும் ஒத்துழைப்பை பாராட்டிய அமைச்சர் தேசிய வானொலி மற்றும் பிராந்திய வானொலி சேவைகளின் நிதியத்தை அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் ஊடகவியலாளர்களின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
000
Related posts:
|
|