மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பில் உத்தேச வேலைத்திட்டம் – தொலைத்தொடர்பு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்!

Friday, January 5th, 2018

பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கற்பதற்கும் பரீட்சார்த்துப்பார்ப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குவதற்குமான உத்தேச திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

11 வயது முதல் 12 வயதுவரையிலான பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கற்பிப்பதற்கும் பரீட்சித்து பார்ப்பதற்குமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 100 பாடசாலைகளில் தேவையான மென்பொருட்கள் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்கீழ் தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலைகளுக்கு பிபிசி மைக்றோ பிற் உபகரணம் 4 , 20 கணனிகள் வீதம் மேலும் சில உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு தேவையான பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான ஒப்பந்தம் இதுதொடர்பான குழுவின் சிபார்சுக்கு உட்பட்ட அமைச்சினால் 99.21 மில்லியன் ரூபா ஓறல் கோப்பறேசன் நிறுவனத்திற்கு நேரடியான ஒப்பந்தம் மூலம் வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பில் தொலைத்தொடர்பு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Related posts: