மாணவர்களுக்கு சுகாதார வசதிகளை செய்து கொடுங்கள் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Sunday, April 25th, 2021

பாடசாலைகளைத் தொடர்ந்து நடத்தவேண்டுமானால் மாணவர்களுக்குச் சுகாதார வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் நாட்டில் நிலவும் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத் திற்கொண்டு பாடசாலைகளைத் தொடர்ந்தும் நடத்த வேண்டுமானால் பாடசாலை மாணவர்களுக்கான விசேட சுகாதார வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்யுள்ளது.

அத்துடன், மாணவர்களுக்கான தரமான முகக்கவம் மற்றும் தொற்று நீக்கிகளை வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளாஸமை குறிப்பிடத்தக்கது.

Related posts: