மாணவர்களுக்கு ஒளி ஊடுருவக்கூடிய பை கட்டாயமில்லை – கல்வி அமைச்சர்!

ஒளி ஊடுருவக்கூடிய புத்தகப் பைகளை மாத்திரம் எடுத்து வருமாறு மாணவர்களுக்கு எவ்வித உத்தரவும் வெளியிடப்படவில்லை எனவும் மாவனெல்லை மயுரபாத வித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாவனெல்லை மயுரபாத பாடசாலைக்கு நேற்று வருகை தந்த மாணவர்களில் ஔி ஊடுருவக்கூடிய பை இல்லாத மாணவர்களை புத்தகங்களை கையில் எடுத்து செல்லுமாறு அதன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக மாணவர்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் , ஔி ஊடுருவக்கூடிய பைகளை மாத்திரம் பாடசாலைக்கு கொண்டு வருமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்யுமாறும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம் சப்ரகமுவ மாகாண ஆளுநரிடமும் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரிடமும் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
|
|