மாணவர்களுக்கு உதவுங்கள் : அறிமுகமானது விசேட தொலைபேசி இலக்கம்!

Friday, May 20th, 2016

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிவாரணங்களை சேகரிக்கும் பணியை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில் 011 27 86 384, 071 23 65 965, மற்றும் 071 83 87 212 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உங்கள் நிவாரணப்பொருட்களை வழங்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மாணவர்களுக்கான நிவாரணப்பொருட்களை நேரடியாக வழங்க விரும்புபவர்கள் பெலவத்த, இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாகவுள்ள நிவாரண சேகரிப்பு பகுதிகளில் கையளிக்க முடியும் என கல்வி அமைச்சு மேலும், அறிவித்துள்ளது.

மேலும், இந்நிவாரண நடவடிக்கைகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும். அத்துடன் விரும்புவர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நிவாரணங்களை வழங்க முடியும்.  நாட்டில் வாழும் சிறுவர்களின் நல்வாழ்விற்காக உங்களால் முடிந்தளவு உதவிகளை வழங்குமாறு கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts:


பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு முறைமையின் கீழ் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து ...
நாடளாவிய ரீதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு - களத்தில் 12000 படையினர் என பிரதிப் பொலிஸ்மா அதி...
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் - பிரதமரிடம் இலங்கைக்கான...