மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

Wednesday, May 8th, 2019

நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும், பரீட்சாத்திகள் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 50 சதவீதமே தற்போது வரை கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்காமையானது, பரீட்சைகளுக்கு முன்னர் அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதில் பெரும் சவால் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய முறையில் முழுமையாக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது வரையில் 50 சதவீதமான விண்ணப்பப்படிவங்களே கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே, விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள் விரைந்து விண்ணப்படிவங்களை அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரியுள்ளது.

Related posts: