மாணவர்களுக்கான புதிய ஆயுள் காப்புறுதித்திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு குழுக்கள்!

பாடசாலை மாணவர்களுக்கான புதிய ஆயுள் காப்புறுதித்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படுமென்றும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு குழுக்கள் அமைக்கப்படவுள்ளன எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இக்கழுவில் ஒரு குழு அமைச்சின் செயலாளர் தலைமையிலும் மற்றைய குழு கல்வி வலய பணிப்பாளர்கள் தலைமையிலும் நியமிக்கப்பட உள்ளன.
செயலாளர் தலைமையில் நியமிக்கப்படும் குழுவில் 2 வைத்தியர்கள், சட்டத்தரணி அடங்கலாக 5 அதிகாரிகள் இடம்பெறுவர். வலய கல்விப் பணிப்பாளர் தலைமையிலான குழுவில் மாகாண சுகாதார அதிகாரி உள்ளிட்டோடார் இடம்பெறுவார்.
அடிப்படை காப்புறுதியை செலுத்துவதற்காக மாகாண வைத்திய அதிகாரி மூலம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண இது குறித்து தெரிவிக்கையில்:
அரசாங்கம் மாணவர்களுக்கான புதிய ஆயுள் காப்புறுதித்திட்டதற்காக 2.7 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. 43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இந்த காப்புறுதித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள். மாணவர் ஒருவர் 2 இலட்சம் ரூபா காப்புறுதிக்கு உரித்துடையவராவார்.
அரச மற்றும் தனியார்துறை வெளிநோயாளர் பிரிவுகளில் இதன் மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வருடம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்படும். தெற்றாத நோய்க்காக ஆகக்கூடிய தொகை 2 இலட்சம் ரூபா செலுத்தப்படும். இதற்கான பத்திரிகை அறிவித்தல், எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படுமென்றும் தெரிவித்தார்.
Related posts:
|
|