மாணவர்களுக்கான சீருடை விநியோகம் நாளை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் நாளை(23) விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில், 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் இந்த விநியோக நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டத்தில் சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சீருடைகள் 70 வீதமான மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, பாடசாலை பாடப்புத்தக விநியோகம் நாளை(23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்!
நாட்டில் கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு – த:டுப்பூசிகள் ஏற்றப்படுவதே மரண வீதம் வீழ்ச்சியடைய காரண...
வட்டுக்கோட்டைச் சிறுமி கல்வியங்காட்டில் சடலமாக மீட்பு – பொலிசார் தீவிர விசாரணை!
|
|