மாணவர்களின் பரீட்சையை குழப்பும் ஹர்த்தால் எதற்கு? – நாளை பரீட்சைகள் நடைபெற வேண்டும் என பொற்றோர் வலியுறுத்து!
Thursday, October 19th, 2023கல்வி நிலையில் பெரும் வீழ்ச்சியை கண்டுவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் ஒருசில அரசியல் கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக ஹர்த்தால் போன்ற இயல்பு நிலையை குழுப்பும் செயற்பாடுகளை மக்களிடையே வலிந்து திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென பாடசாலை மாணவர்களின் பெற்றோரும் புத்திஜீவிகளும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் நாளையதினம் நடைபெறவுள்ள ஹர்த்தாலை புறக்கணித்து பாடசாலை மாணவர்களின் பரீட்சையை நடத்துவதற்கு கல்விசார் அதிகாரிகள் முழுமையான நடவடிக்கை எழுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த தரப்பினர் கூறுகையில் – நாளையதினம் (20) வடக்கு கிழக்கு முழுவதும் ஹர்த்தாலினை அனுஷ்டிப்பதற்கு ஒருசிலரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அரச பேருந்துகளின் சேவை வழமைபோன்றே நடைபெறும் என தெரியவரகின்றது.
இந்நிலையில் பாடசாலைகளில் தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகிறது. தரம் 6 – 9 வரையான மாணவர்களுக்கு வலய ரீதியிலான பரீட்சையும், தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு மாகாண ரீதியிலான பரீட்சையும் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நாளையதினம் பாடசாலையை நடாத்துவதா? இல்லையா என அந்த அந்த கல்வி வலயங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸ் நேற்றையதினம் தெரிவித்திருந்தார். இது ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று.
கடந்த காலங்களிலும் இந்த ஆசிரியர்கள் தங்களது ஊதியப் பிரச்சினையை காரணம் காட்டி மாணவர்களின் கல்வியை பல மாதங்கள் சீழித்திருந்தனர். அதேபோன்று கொரோனா தொற்றாலும் அதன்பின்னர் நாட்டின் அசாதாரண நிலைகளாலும் மாணவர்களின் கல்வி நிலை பெரும் பாதிப்பை கண்டது.
இந்நிலையில் தேவையற்ற ஒரு விடயத்தை காரணம் காட்டி ஹர்த்தாலலை நடைமுறைப்படுத்துமாறு சிலர் வீடு வீடாக ஊர் ஊராக அலைந்து திரிந்து வருகின்றனர்
இத்தைகைய காரணங்களால் நாளை நடைபெறவுள்ள பரீட்சையை ஒரு கல்வி வலயம் வைத்து, ஒரு வலயம் பிற்போட்டால் அந்த பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகி விடும். இதனால் பிற்போடப்படும் பரீட்சைகள் மூலம் பிரயோசனம் இருக்காது இது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பங்களையும் உருவாக்கும்..
இது குறித்து மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்திற்கு ஒரு தெளிவான பதிலை வழங்குவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனை இரண்டு தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அவர் கூட்டத்தில் இருப்பதாக பொறுப்பற்ற பதிலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த ஊடகவியலாளர் வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் பிரெக்ட்லிக்கை தொடர்புகொண்டு கேட்டபோது, அந்தந்த பாடசாலை அதிபர்களே, நாளையதினம் பரீட்சையை நடாத்துவதா? இல்லையா என முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரச பேருந்துகள் நாளையதினம் வழமைபோன்று சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படும் நிலையில் பரீட்சையை நடத்துவதில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கப்போவதில்லை
இதேநேரம் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸின் பொறுப்பற்ற இந்தப் பதிலானது மாணவர்களது கல்வியலும் பாடசாலை சமூகத்தின் நிர்வாக முறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|