மாணவர்களின் நலன் கருதி வட மாகாண ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!

Saturday, July 27th, 2019

பரீட்சைக் காலத்தை கருத்திற்கொண்டு ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் அமுல்ப்படுத்தமாறு உரிய அதிகாரிகளுக்கும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும், வடக்கின் ஐந்து மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும், மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கும் ஆளுநர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இம்முறை ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப்பரீட்சை, ஓகஸ்ட் 31ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது.

அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் 15ஆயிரத்து 213 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 3 ஆயிரத்து 857 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் 217 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதன்காரணமாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: