மாணவனை தாக்கியவர் கூரையில் வைத்து கைது!

Tuesday, June 14th, 2016

மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரமூர்த்தி பரணிதரன் (வயது 17) என்ற மாணவன் மீது, கொடிகாமம், இராமாவில் பகுதியில் வைத்து  தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், தன்னுடைய வீட்டின் கூரையின் மீதேறி ஒளிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுளார் என்று கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என் பண்டார தெரிவித்தார்.

குறித்த மாணவன் மீது இளைஞர் குழுவொன்று,  திங்கட்கிழமை (13)  தாக்குதல் நடத்தியுள்ளது. அதில், படுகாயமடைந்த மாணவன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவன், தனது நண்பியுடன் வீதியில் நின்று கதைத்துக்கொண்டிருந்த போது, அவ்விடத்துக்கு வாள்கள், பொல்லுகளுடன் வந்த இளைஞர் குழுவொன்றே அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்ட போது, மீசாலைப் பகுதியைச் சேர்ந்த ரௌவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து, தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், பிரதான சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அந்நபர், வீட்டுக்கூரையின் மீது ஏறி ஒளித்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் நால்வரை கைது செய்யப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி கூறினார்.

பிரதான சந்தேகநபர் தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஏற்கெனவே 10 வழக்குகள் உள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

 

Related posts: