மாணவனை காணவில்லை என முறைப்பாடு!

Tuesday, October 25th, 2016

புத்தூர் கிழக்கைச் சேர்ந்த புத்தகலட்டி சிறி. விஷ்ணு வித்தியாலத்தில் தரம் 11இல் கற்கும் சிரஞ்சீவி மதுசாந்தன் (வயது-17) என்ற மாணவனைக் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை முதல் காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை பாடசாலைக்குச் சென்ற மாணவன் வைத்தியசாலைக்குச் சென்று ஊசி போட வேண்டும் எனக்கூறி பாடசாலையில் அனுமதி பெற்றே வெளியேறியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. காணமற்போன மகனுக்கு எந்தவிதமான பகைமையும் இல்லை. கணவர் 6 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். மதுசாந்தனை எல்லா இடங்களிலும் தேடிவிட்டோம். எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. என்று அவரின் தாய் தெரிவித்தார்.

missing_t755_ha8222103324c9b396c453eb2280c5a3355eae4f6

Related posts: