மாணவனுக்கு அனுமதி மறுப்பு –மனித உரிமைகள் ஆணைக்குழு அதிபர்களை அழைப்பு!

கிளிநொச்சியில் தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு அனுமதி வழங்காத விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி கிளிநொச்சி மகா வித்தியாலம் ஆகிய பாடசாலை அதிபர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு விசாரணைக்கு வருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி. கனகராஜ் அழைப்பானை அனுப்பியுள்ளார்.
கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஐந்து வரை கல்வி பயின்ற பழைய கச்சேரிக்கு பின் புறமாக வசிக்கின்ற த. குயிலன் என்ற மாணவனுக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் தரம் ஆறுக்கு சேர்ப்பதற்கு அனுமதி கேட்டு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வலயக் கல்விப் பணிமனையிடம் முறையிட்ட போது அவர்களும் எதுவும் செய்ய முடியாது என கைவிட்டுவிட்டனர் எனத் தெரிவித்து குறித்த மாணவனின் தந்தை க. தங்கவேல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டமைக்கு அமைவாக இவ் அழைப்பானை அனுப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|