மாட்டுவண்டிலில் சபைக்குச் சென்ற மஹிந்த அணியினர்!

Wednesday, November 8th, 2017

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் வடமேல் மாகாணசபை அமர்வில் பங்கேற்பதற்காக மஹிந்த தரப்பு உறுப்பினர்கள் சிலர் மாட்டுவண்டிலில் பயணித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது. வடமேல் மாகாணசபையின் இந்த மாதத்துக்கான அமர்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிரதான வீதியில் மாட்டுவண்டிலில் பயணம் செய்து மாகாணசபையை அடைந்தனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியும் நல்லாட்சி அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்ட பாதாகைகளை ஏந்தியவாறும் உறுப்பினர்கள் மாட்டுவண்டிலில் பயணம் செய்தனர்

Related posts: