மாடுகளை திருடும் நபர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் – விவசாய அமைச்சு எச்சரிக்கை!
Monday, May 15th, 2023கறவை மாடுகளை திருடும் நபர்களை கைது செய்து அவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்களில் மாடு திருட்டுகள் அதிகரித்து வருவதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் அமைச்சர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 20 லீற்றர் பால் வழங்கும் கறவை மாடுகள் திருடப்படுவதாகவும், வாரத்திற்கு சுமார் 35 மாடுகள் ஒரு மாவட்டத்தில் இருந்து திருடப்படுவதாகவும் விவசாய அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன்படி, கறவை மாடுகளை திருடி கைது செய்யப்படும் நபர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யால தேசிய பூங்கா மூடப்படுகிறது!
இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநக...
இலங்கையர்களின் காணிகள் மோசடியாக விற்பனை - அதிர்ச்சியில் மக்கள்!
|
|
மின்சார துண்டிப்பு தொடர்பில் நாளை தீர்மானம் - பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதி...
அடுத்த பாடசாலை தவணைக்கு முன் 34 ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப...
நாகப்பட்டினம் - திருகோணமலை இடையில் எண்ணெய் குழாய்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் தொடர்ந்தும் பே...