மாகாண வரி மதிப்பீட்டாளர் போட்டி பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி!

Friday, March 22nd, 2019

வடக்கு மாகாண இறைவரி சேவையின் நிறைவேற்றுத்தரத்தில் மாகாண வரி மதிப்பீட்டாளர் III  பதவிக்கு ஆட் சேர்ப்பு செய்வதற்கான  திறந்த போட்டிப்பரீட்சையானது எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குத்தீர்மானிக்கப்பட்டுள்ளது என வடமாகாணம், மாகாணப்பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைக்கு விண்ணப்பித்த தகைமையுடைய பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே 2 ஆம் திகதிக்கு முன்னர் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம் இல: 393/48, கோவில் வீதி நல்லூர், யாழ்ப்பாணம் என்னும் முகவரியுடனோ அல்லது 021-2219939 என்னும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எவ்வாறாயினும் பரீட்சாத்திகளுக்குரிய அனுமதி அட்டைகள் இருந்தால் மட்டுமே பரீட்சைக்கு தேற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.