மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளிநாடு பயணம் திட்டமிடப்பட்ட செயல் – கபே அமைப்பு குற்றச்சாட்டு!

நாட்டின் உள்டளூராட்சி மன்ற எல்லை நிர்ணய குழுவின் பணிகள் நிறைவடைந்து நாளைதினம் அறிக்கை தாக்கல் செய்ய தயாரான நிலையில் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக குற்றம்சுமத்தியுள்ளது.
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை பூர்த்தி அடைந்துள்ளதாக கடந்த வெள்ளிகிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக குழு அறிவித்துள்ள நிலையில் இந்த அறிக்கையை தாமதப்படுத்துவதற்காக அமைச்சர் திட்டமிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
Related posts:
வேலையற்ற பட்டதாரிகளின் 5 ஆம் நாள் போராட்டத்திலும் ஈ.பி.டி.பி. பங்கேற்பு!
தேய்காக்கான நிர்ணய விலை வர்த்தமானி அறிவிப்பு!
31 ஆம் திகதி நள்ளிரவுவரை அனைத்து விமான சேவைகளும் இரத்து - சிவில் விமான சேவைகள் அதிகார சபை!
|
|