மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!
Saturday, June 5th, 2021பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இத்தகைய பாடசாலைகள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த இத்திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வியை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 % இருந்து 60 % உயர்த்தவும் கலைத் துறையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாகக் குறைக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் கபில பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|