மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை நடத்தவும் – பிரதமரிடம் ஆணைக்குழு அதிகாரிகள் பரிந்துரை!

Saturday, May 18th, 2024

பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த தேர்தல் பல ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் இருப்பதால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளூராட்சி பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது எனவும் மட்டங்களில் ஆணைக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்பதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து உரையாடியிருந்தார். இதன்போதே அதிகாரிகள் இந்த நிலைமையை எடுத்துக் கூறியிருந்தனர்.

இதன்போது மாகாண சபைத் தேர்தலுக்கு இடையூறாக உள்ள தடைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் பிரதமரிடம் முன்வைத்தனர்.

குறிப்பாக 2017 ஆம் ஆண்டில் இருந்து மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஆகவே ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும், வலுவான உள்ளூர் நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அவசியமானதென ஆணைக்குழு அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: