மாகாண சபை தேர்தல்: மகிந்த விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Monday, December 24th, 2018

மாகாண சபை தேர்தல்களை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் தொடர்பான நடைமுறைகள் மற்றும் மாகாண சபை தேர்தல் நடத்துவது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,

மாகாண சபை தேர்தல்களை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு அமைய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டியது அவசியமாகின்றது.

அரசியல் கட்சிகள், விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தலை நடாத்துவதற்காக மாகாண சபை தேர்தல் சட்டத்தினை அரசியல் கட்சிகள் மாற்ற வேண்டும்.

இதனை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற வேண்டும் என்றார்.

Related posts: