மாகாண சபை தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் இறுதித்தீர்மானம் – எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு!

Tuesday, April 6th, 2021

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் எனவும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக பிளவுபட்ட கருத்து இருப்பதால் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

Related posts: