மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு!
Sunday, February 24th, 2019மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, புதிய முறையில் நடத்துவதற்குள்ள பிரச்சினைகள் மற்றும் பழைய முறையில் விரைவில் நடத்துவதற்கான இயலுமை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ஆகியோர் கலந்துக் கொள்வதற்கான இணக்கபாடு கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
Related posts:
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கல் நிறுத்தம் - அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கிய விமானம் சேதம்!
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவிப்பு!
|
|