மாகாண சபை தேர்தல்களை பிற்போட முடியாது – தேர்தல் ஆணையாளர்!

Tuesday, June 13th, 2017

மாகாண சபை தேர்தல்களை பிற்போட முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

இரத்தினபுரியில் இடம்பெற்ற பொது சிரமதான நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார்

மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்து ஒரு வார காலத்திற்குள் அடுத்த தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட வேண்டும்

நீதிமன்ற உத்தரவு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே தேர்தலை பிற்போட முடியும் என் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளா

வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: