மாகாண சபை தேர்தலுக்கு 4000 மில்லியன் ரூபா தேவை – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, December 29th, 2020

மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வு காணப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதாயின் சுமார் 4,000 மில்லியன் ரூபா செலவாகும் என நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்

Related posts: