மாகாண சபை ஆட்சி முறையை முழுமையாக நிறைவேற்ற இந்தியாவின் உதவியை நிச்சயமாக பெற முடியும் . வேட்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் !

Sunday, August 2nd, 2020

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோட்பாட்டுத் தீர்வு இலங்கை அரசமைப்பில் தற்போது இருக்கின்ற – தமிழர்களுக்காக வழங்கப்ப்பட்ட ஆகக் கூடிய அதிகாரம் மிக்க நிர்வக அலகு மாகண சபை முறை ஆகும். அது முழுமையானது இல்லாமல் இருக்கலாம். தமிழர்களின் அரசியல் அபிலாசைகள முழு

மையாகப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். ஆனால் அரசமைப்பில் ஏற்கெனவே இருக்கின்ற அந்த விடயத்தை முழுமையாக நடமுறைப்படுத்த வைக்க வேண்டும் என்பதே – அரசியல் தீர்வு நோக்கிய எமது கட்சியின் நிலைப்பாடு. என ரூடவ்ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

வடமராட்சி கரணவாய் மண்டான் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

மாகாண சபை ஆட்சி முறையை முழுமையாக நிறைவேற்ற வேண்டு என்று ஒரு கோரிக்கையை நாம் முன்னெடுத்தால் அதற்கு இந்தியாவின் உதவியையும் நிச்சயமாக பெற முடியும். அதனை நடைமுறைப்படுத்த வைத்து அதனுடைய ஆட்சியதிகாரப் பயன்களை நாம் பெற்றுக்கொண்டே அடுத்த கட்டத்தை நோக்கி நான் முன்னேற வேண்டும்.

ஆனால் தமிழ் அரசு கட்சி அந்த விடயத்தில் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது. வடக்கு மாகாண சபையை ஆட்சி செய்து மாகாண சபையை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போகின்றோம் என வாக்குறுதி அளித்து அதனைக் கைப்பற்றி வைத்திருந்த போதும் சபைக்குள் பதவிச் சண்டையும் சுயநலமான தற்பெருமைச் சண்டையும் பிடித்து தமக்குள்ளேயே ஆளை ஆள் கவிழ்த்து ஐந்து வருடங்களில் அதனை வீணடித்தார்கள். பின்னர் – மாகாண சபை முறை போதாது என்றும் “ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி” என்று ஒரு நிரந்தரத் தீர்வு காணப் போகின்றோம் என்றும் கூறி -எத்தகைய வல்லமையோ அல்லது தற்துணிவோ இல்லாத ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு  முண்டு கொடுத்து தமது தனிப்பட்ட இலாபங்களை மட்டும் பெற்று அதிலும் ஐந்து வருடங்களை வீணடித்தார்கள். ஏன அவர் குற்றம் சாட்டினார்

Related posts:

விடுதி வசதி அமையுமாகில் அதிகமான மாணவர்கள் கற்கும் வசதி ஏற்படும் - வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி அதிப...
இழப்புகள் அர்த்தமுள்ள வகையில் அரசியலாக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத...
தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள 4,643 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் - கல்வி அமைச...