மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் அறிவிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

வடக்குக் கிடக்கு உள்ளிட்ட மாகாண சபைத் தேர்தல்களை நடத்த தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிகேவா தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்தல்களை நடத்தக் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், சிறப்புப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவெற்ற முடியும் என்றும் இது தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் நிகால் கேவா தெரிவித்தார்.
பழைய தேர்தல் முறையில் தேர்தல் நடத்தப்படுமெனவும், புதிய தேர்தல் முறை மற்றும் மாகாணங்களுக்கான எல்லை நிர்ணயம் குறித்த விடயங்கள் இன்னமும் முடிவுக்கு வராததால் பழைய தேர்தல் முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் அறிவிக்குமெனவும் அது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச வேண்டுமெனவும் நிகால் புஞ்சிகேவா குறிப்பிட்டார்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை மகிந்த ராஜபக்ச நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|