மாகாண சபைத் தேர்தலை எந்நேரத்திலும் நடத்த தயார் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவிப்பு!

Saturday, March 20th, 2021

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான, ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டம் என்பனவற்றை அரசாங்கம் ஏற்படுத்தித் தருமாயின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான சிரேஷ்ட நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சுமார் இரண்டரை மாதம் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: