மாகாண சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி விரைவில் –  சு.க. பொதுச் செயலாளர் !

Saturday, November 3rd, 2018

மாகாண சபைத் தேர்தலை விரைவுபடுத்தும் முகமாக நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் செயற்பாடுகளை முன்னாள் பிரதமர் இழுத்தடித்தமையும் ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணமாக காணப்படுகிறது.

எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் செயற்பாடுகள் தற்போது ஜனாதிபதியிடம் பொறுப்பாக் கப்பட்டுள்ளது. வெகு விரைவில் மாகாண சபை தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவித்தார்.

அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடைபெறும்.  அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலையும் வெகுவிரைவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்குப் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Related posts: