மாகாணசபை முறை அபிவிருத்திக்கு தடையான ஒரு பயனற்ற முறை – பிரதியமைச்சர் நிரோஷன் பெரேரா!

Thursday, February 2nd, 2017

மக்களை வலுப்படுத்தி தேவைகளை நிறைவேற்றவே இலங்கையில் அதிகாரத்தை பரவலாக்க வேண்டுமே அன்றி அரசியல்வாதிகளின் தேவையை நிறைவேற்றவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அதிகாரம் பரவலாக்கப்படக் கூடாது என பிரதியமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகார பரவலாக்கம் மற்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் அமுலில் உள்ள மாகாணசபை முறைமையானது அதிக செலவுகளை ஏற்படுத்தும் பயனற்ற ஒரு முறையாக மாறியுள்ளது.

மாகாணசபைகளை விட மாவட்ட மற்றும் பிரதேச செயலக முறை மூலமான நிர்வாகங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.

நாட்டிற்குள் இருக்கும் மாகாண சபைகள் நாடு முழுவதும் உள்ள பிராந்திய அரசுகளாக பிரிந்து நிர்வாகத்தை மேற்கொள்வதுடன் நாட்டின் அபிவிருத்திக்கு தடையான நிலைமையை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மாகாணசபைகளின் பயனற்ற தன்மை மற்றும் ஒருதலைப்பட்சமான செயற்பாடுகளால் தாமதமாகியும் தோல்வியடைந்தும் வருகின்றன.

மாகாண இளவரசர்களின் ஆட்சிக்குட்பட்டுள்ள மாகாணசபைகளில் பயனற்ற நிலைமை வேர்பிடித்துள்ளது எனவும் நிரோஷன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

nolight1

Related posts: