மாகாணசபை தேர்தல் விவகாரம் – தொடரும் இழுபறி நிலை – பொது இணக்கப்பாட்டை வரும் புதனன்று தெரிவிக்குமாறு கோருகிறார் பிரதமர்!

Thursday, July 26th, 2018

மாகாணசபை தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்களது கூட்டத்தில் எதுவிதமான தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் கூட்டம் முடிவுற்றுள்ளது.

மாகாண சபை தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா? அல்லது பழைய முறைமையில் நடத்துவதா? என்பது குறித்து கட்சிகளுக்கிடையே எழுந்துள்ள முரண்பாடு காரணமாக குறித்த  தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக இன்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்படாத நிலையில் குறித்த கூட்டம் முடிவுற்றுள்ளது.

மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தேர்தலை புதிய முறையில் நடத்துவதா அல்லது பழைய முறையில் நடத்துவதா என்பது தொடர்பில் கட்சிகளின் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து இன்றையதினம் ஆராயப்பட்ட நிலையில் கட்சிகளுக்கிடையே எதுவிதமான பொது இணக்கமும் காணப்படாத நிலையில் குறித்த கூட்டம் நிறைவுற்றுள்ளது.

இந்த இழுபறி நிலை தொடர்பில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு அனைத்துக் கட்சிகளும் தமக்கிடையே உள்ள முரண்பாடுகள் தெடர்பில் ஆராய்ந்து ஒரு பொது இணக்கப்பாட்டை வரும் புதன்கிழமைக்கு முன்னர் எட்டி அதனை எதிர்வரும் புதன்கிழமை தனக்கு தெரிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: