மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ள பிரதமர்!
Monday, April 26th, 2021பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் மே 4 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கூட்டத்தில் இரண்டு பிரச்சினைகளை உறுதியாக தீர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதிலொன்று தேர்தல் முறையின் தீர்க்கப்படாத பிரச்சினை மற்றும் ஒவ்வொரு பிரிவுக்கும் 03 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என்பது மற்றயதாகும்.
இது தொடர்பில் அன்றையதினம் இறுதி முடிவு எடுக்கப்பட்டால், மாகாண சபை தேர்தல் சட்டம் அடுத்த சில வாரங்களில் திருத்தம் செய்யப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நியமனம் பெற்று 4 மாதத்துக்குள் 800 ஆசிரியர்கள் இடமாற்றம்!
பொதுப் போக்குவரத்தின் போது சுகாதார விதிமறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - பொலிஸ் ஊட...
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
|
|