மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க யோசனை முன்வைக்கப்படவில்லை – அமைச்சர் தினேஷ் குணவர்தன!

Monday, December 20th, 2021

மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வில்லையென சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கெலிஓயா பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் பிற்போடவுள்ளதாக சிலர் கூறுகின்ற போதிலும், அது தொடர்பான எந்தவொரு அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லையென அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: