மாகாணசபைகளுக்கான நிதி குறைக்கப்படவில்லை – நிதியமைச்சர்!

Tuesday, December 6th, 2016

2017ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் மாகாண சபைகளுக்கான நிதி குறைக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சில மாகாணசபை முதலமைச்சர்கள் சபைகளுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கூற்றுக்களின் எந்தவித உண்மையுமில்லை என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் சில துறைகளுக்காக இதுவரைகாலமும் மாகாணசபைகளுக்கென வழங்கப்பட்ட நிதி நடைமுறைக்கு பதிலாக சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு தேவையான நிதியுதவியை நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். அரசாங்கம் மாகாணசபைகளுக்கு ஒதுக்கீடுசெய்யும் நிதியை வெளிநாட்டு பயணங்கள் போன்ற வீண்விரயங்களுக்கு பயன்படுத்துவதை தடுத்து பொதுமக்களுக்கு உரிய சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

153a66e3c429d442e7716fd61065c172_XL

Related posts: