மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சிப்பவர்கள் கைதாவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் வேலைக்குச் செல்வதற்காக மாகாண எல்லைகள் இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அனைத்து அரச ஊழியர்களும் இன்றுமுதல் பணிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது, இது தொடர்பாக அரசாங்க சுற்றறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் அரச ஊழியர்கள் எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதுடன், மாகாண எல்லைகளில் அவர்கள் சோதனை செய்யப்படுவார்கள். அவர்கள் வேலைக்குச் செல்லத் தேவையான அடையாளம் மற்றும் அலுவலக ஆவணங்களை தங்களுடன் கொண்டுசெல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் போது சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் பொதுமக்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமுலில் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: